ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா துவக்கம்

51பார்த்தது
புகழ்பெற்ற அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

செங்கல்பட்டு மாவட்டம்
அச்சிறுப்பக்கம் பாண்டிய மன்னனால் கட்டப்பட்டு திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி, ஆகிய நால்வரால்
பாடல் பெற்ற கோவிலாக இந்தக் கோயில் புகழ்பெற்று திகழ்ந்து வருகிறது.

ஆண்டுதோறும் இக்கோவிலின் சித்திரை பெருவிழா நடைபெறும்
இதே போன்று இந்த ஆண்டு சித்திரை பெருவிழா ஏப்ரல் 13 தேதி தொடங்கி ஏப்ரல் 25 தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.

இவ்விழாவில் ராஜகோபுரம்
உள்பிரகார சன்னதிகள் ஆகியவை வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

சித்திரைப் பெருவிழா காலை மங்கல இசையுடன் ஆட்சிஸ்வரர், இளங்கிளி அம்மன் நந்தி ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ராஜகோபுரம் அருகில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றி வைத்து சித்திரை திருவிழாவை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி