அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் இளைஞர் இளம்பெண் பாசறை மற்றும் கழக மகளிர் அணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அச்சரப்பாக்கம் பேரூராட்சி சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இளைஞர் இளம் பெண் பாசறை மற்றும் கழக மகளிர் அணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தை அச்சரப்பாக்கம் பேரூர் கழகச் செயலாளர் முருகதாஸ் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் அவர்கள் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய அதிமுக நிர்வாகிகள் பாடுபட வேண்டும்
திமுக ஆட்சியில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வருவதாக கூறிவிட்டு முப்பது சதவீதம் பெண்களுக்கு கூட பணம் வழங்கவில்லை தேர்தல் வாக்குறுதிகளை ஒன்று கூட நிறைவேற்றாத விடியா
திமுக அரசு என பல்வேறு ஆலோசனைகளை வழங்கப்பட்டது. பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான படிவம் அதிமுக நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அனந்தமங்கலம் சுப்ரமணியம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.