பள்ளி வளாகத்தில் ஆபத்தாக இருக்கும் மின்கம்பம்

63பார்த்தது
பள்ளி வளாகத்தில் ஆபத்தாக இருக்கும் மின்கம்பம்
மதுரமங்கலம் அடுத்த, பிச்சிவாக்கம் ஊராட்சியில், பட்டுமுடையார்குப்பம் துணை கிராமம் உள்ளது.

துவக்கப் பள்ளி வளாகத்தில், அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு, 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் துவக்கப் பள்ளி மாணவ- - மாணவியர் என, படித்து வருகின்றனர்.

இந்த பள்ளி வளாகத்திற்குள் சென்ற மின் வழித் தடம், சமீபத்தில் அகற்றப்பட்டு உள்ளது. மின் கம்பத்தை இன்னமும் அகற்றவில்லை. பலத்த காற்று அடிக்கும் போது, மின்கம்பம் முறிவு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, பட்டுமுடையார்குப்பம் துவக்கப் பள்ளி வளாகத்தில் இருக்கும், மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

டேக்ஸ் :