திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

60பார்த்தது
திடீரென தீப்பிடித்து எரிந்த கார்
சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் உதயன், 35. இவர், நேற்று 'ஹோண்டா ஐ -20' காரில், தேனாம்பேட்டையில் இருந்து படாளம் அடுத்த புக்கத்துறை வழியாக வந்தவாசிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, புக்கத்துறை பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது, காரின் முன் பகுதியில் திடீரென புகை வந்தது. சுதாரித்துக் கொண்ட உதயன், காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். பின், மளமளவென கார் தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தீயணைப்புத் துறையினர் மற்றும் படாளம் போலீசார், தீயை போராடி அணைத்தனர். வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி