காஞ்சியில் 2 இடங்களில் சிக்கிய ரூ. 9. 4 கோடி நகைகள்

53பார்த்தது
காஞ்சியில் 2 இடங்களில் சிக்கிய ரூ. 9. 4 கோடி நகைகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 24 மணி நேரமும், மூன்று ஷிப்டுகளில், பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

ஸ்ரீபெரும்புதுார் பகுதியில், சுங்கச்சாவடி அருகே நடத்தப்பட்ட சோதனையில், 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான சமையலுக்கு பயன்படும் பாத்திரங்கள் பிடிக்கப்பட்டுள்ளன.

அதேபோல, அரக்கோணத்திலிருந்து, செங்கல்பட்டு நோக்கி சென்ற வாகனம், நேற்று முன்தினம் வையாவூர் அருகே சென்றபோது, அதில் நகை இருந்தது தெரியவந்தது. அவற்றை கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

அதேபோல, உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட வாலாஜாபாதில், நேற்று முன்தினம் இரவு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட நகைகளை நிலையான கண்காணிப்பு குழுவினர் பிடித்துள்ளனர்.

வையாவூர் அருகே பிடிக்கப்பட்ட நகையின் மதிப்பு 6. 6 கோடி ரூபாயும், வாலாஜாபாதில் பிடிக்கப்பட்ட நகை 2. 8 கோடி ரூபாய் என்பதும் தெரியவந்துள்ளது.

இரு இடத்திலும் பிடிக்கப்பட்ட நகைகளின் ஆவணங்களை, வருமான வரித்துறை அதிகாரிகளை வரவழைத்து, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்றிரவு வரை சோதனை செய்யப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி