இருசக்கர பேரணியை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர்

74பார்த்தது
காஞ்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து மாமல்லபுரத்தில் நடைபெற்ற 500 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன பேரணியை முன்னாள் அமைச்சர் பா வளர்மதி துவக்கி வைத்தார்.


செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பேரூராட்சியில் திருக்கழுக்குன்றம் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் மாமல்லபுரம் ராகவன் ஏற்பாட்டில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி கலந்து கொண்டு பொதுமக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், முன்னதாக மாமல்லபுரம் கருக்காத்தம்மன் கோவில் அருகே 500 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்ற பேரணியை அமைச்சர் வளர்மதி துவக்கி வைத்தார், இந்த பேரணியானது பேரூராட்சி அலுவலகம் , ஐந்து ரதம் வழியாக வெண்புருஷம் வரை சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வாகன பேரணி முடிவுற்றது நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் ம. தனபால், மாமல்லபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், மாவட்ட துணை செயலாளர் எ. எஸ்வந்த்ராவ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் பக்தவச்சலம், பேரூர் கழக செயலாளர் கணேசன் நிர்வாகிகள் சுகுமார் பூங்குழலி, ஜி. கே. பாபு, காயத்ரி தனபால், சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி