குஜராத் மாநிலத்தில் 'ஜெயின் கோவில் நகரம்' என்ற புனைப்பெயரைப் பெற்ற பாலிதானா, அசைவ உணவு விற்பனை மற்றும் நுகர்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள உலகின் முதல் நகரம் என்ற வரலாற்றை படைத்துள்ளது. பாலிதானாவில் உள்ள 250க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகளை மூடக்கோரி, சுமார் 200 ஜெயின் துறவிகளின் தொடர்ச்சியான வலியுறுத்தலை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பாலிதானாவை பின்பற்றி ராஜ்கோட், வதோதரா, ஜூனாகத், அகமதாபாத்தில் இதேபோன்ற விதிமுறைகளை அமல்படுத்த தொடங்கியுள்ளன.