மதுராந்தகம் பகுதியில், கற்போரின் எண்ணிக்கை கணக்கெடுப்பு பணியை, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் இயக்கக இணை இயக்குனர் குமார், நேற்று ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், புதிய பாரதஎழுத்தறிவு திட்டம் 2024- - 25 ஆண்டிற்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில், அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய வட்டாரங்களில், 15 வயதுக்கு மேற்பட்டஎழுதப்படிக்கத் தெரியாதோர் அனைவரையும் முழுமையாகக் கண்டறியும் கணக்கெடுப்பு, கடந்த மே மாதத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.
மாவட்டத்தில், சித்தாமூர் வட்டாரத்தில், போந்துார், ஆற்காடு, அம்மன் நகர் மற்றும் மதுராந்தகம் வட்டாரத்தில், கீழக்கரணைகிராமங்களில், கற்போரின் எண்ணிக்கை கணக்கெடுப்பு பணியை, இணை இயக்குனர் குமார், நேற்று கள ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குபின், கற்போரின் எண்ணிக்கை பணியை விரைவாக முடிக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.