பேருந்துக்குள் கொட்டித் தீர்த்த மழை பயணிகள் அவதி

84பார்த்தது
பேருந்துக்குள் கொட்டித் தீர்த்த மழை

அட அரசு பேருந்துக்குள் ஷவரா என.? ஆட்சியரத்துடன் ரசித்து கொண்டு சென்ற பயணிகள்

தொடர்ந்து மோசமாக பராமரிக்கப்படும் பேருந்துகளால் பயணிகள் அவதி

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. நேற்று மாலை 6 மணி அளவில் துவங்கிய மழை 8 மணி வரை பெய்தது. திடீர் மழையால் ஒருபுறம் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் மறுபுறம் வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் அவதி அடைந்தனர்.


இந்தநிலையில் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற (தடம் எண் M500) சென்னை மாநகர பேருந்து ஒன்றில் மேற்கூரை சரியில்லாததால், மழைநீர் பேருந்தில் மழை நீர் கொட்டும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.


தொடர்ந்து மாநகர பேருந்துகள் சரியாக பராமரிப்பது இல்லை என குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் தற்பொழுது மழை அதை நிரூபித்துள்ளது.

ஒரு சில பயணிகள் அரசு சவர் ஏற்பாடு செய்துள்ளது இங்கு குளித்துவிட்டு செல்லுங்கள் என கிண்டல் அடித்து விட்டு சென்றனர்.
இந்த காட்சிகள் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாக்கு பரவி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி