செங்கல்பட்டில் கடலோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள படகுகள்

68பார்த்தது
மாமல்லபுரம், சதுரங்கபட்டினம் கல்பாக்கம் சுற்றுப்புற மீனவர்கள், வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இரண்டாவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை கடல் அலைகள் 10 முதல்12 அடி வரை எழுவதாகவும் வலைக் கூடங்கள் அமைத்து தர கோரிக்கை.

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மாமல்லபுரம் கல்பாக்கம் சதுரங்கப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரையில் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம், கொக்கிலமேடு, கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம் மீனவர்குப்பம், உய்யாலிகுப்பம், ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மேலும், மீன்பிடி படகுகளையும் பாதுகாப்பான முறையில் மேடான பகுதிகளுக்கு படகுகளை பாதுகாத்து கரையில் நிறுத்தியுள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி