உலக பாரம்பரிய தினத்தில் வெறிச்சோடிய மாமல்லபுரம்

53பார்த்தது
உலக பாரம்பரிய தினம் ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது அந்நாளில் மாமல்லபுரம் புராதன சின்னங்களை இலவசமாக சுற்றி பார்க்க தொல்லியல் துறை அனுமதித்துள்ளது சுட்டெரிக்கும் வெயில் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் இல்லாமல் சுற்றுலா தளங்கள் வெறிச்சோடி காணப்பட்டன வெண்ணெய் உருண்டை பாறை ஐந்து ரதம் கடற்கரை கோவில் என அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் தொல்லியல் துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது நிகழ்ச்சியை தொல்லியல் துறையின் சென்னை வட்ட கண்காணிப்பாளர் காளிமுத்து சிறப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவியர் உட்பட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.

தொடர்புடைய செய்தி