மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் புகுந்த காட்டுப்பன்றி

80பார்த்தது
மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் புகுந்த காட்டுப்பன்றி
கேரளாவின் பத்தனம்திட்டா அருகே நெடும்பாறை கொன்னி அரசு மருத்துவக் கல்லூரி அவசர சிகிச்சைப் பிரிவில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் காட்டுப்பன்றி ஒன்று புகுந்தது. அப்பகுதியில் தெருநாய்கள் விரட்டியதால் பீதியடைந்த காட்டுப்பன்றி அவசர சிகிச்சை பிரிவுக்குள் ஓடியது. அப்போது நோயாளிகள் யாரும் இல்லாததாலும், ஊழியர்கள் மட்டுமே இருந்ததாலும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து, ஓபி டிக்கெட் வழங்கும் கவுண்டர் வழியே காட்டுப்பன்றி வெளியேறியது.

மருத்துவக்கல்லூரி விடுதி அருகே இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் நடமாடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும், இரவு நேரங்களில் காட்டுமாடுகளும் மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து விடுவதாகவும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி