மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று நடைபெற உள்ளதையொட்டி தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களில் சேர்ந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மாமல்லபுரம் நோக்கி வர தொடங்கி இருப்பதால் கிழக்குக் கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டுள்ளது இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த போக்குவரத்து நெரிசலை காவல்துறையினர் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.