பெட்டிக்கடை நடத்தி வந்தவர் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை

1918பார்த்தது
பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் குமாருக்கு சொந்தமான கடையில் வாடகைக்கு கடை எடுத்து பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். இவர் பெட்டி கடைக்கு அருகில் மகி என்பவர் மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கும் கடையும் இருந்துள்ளது. இந்த நிலையில் செல்வம் இவரது மனைவி அமலா சுபநிகழ்ச்சிக்காக இரு தினங்கள் கடையை ‌மூடிவிட்டு சென்றுள்ளார்.

அப்பொழுது கடையின் உரிமையாளர் குமார் மற்றும் குருசாமி, மகி ஆகியோர் செல்வம் கடையை திறக்கவிடாமல் சாலையில் நிற்க வைத்து அவதூறான வார்த்தைகளால் பேசியும் செல்வத்தை‌ தாக்கியுள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த செல்வம் வீட்டிற்குச் சென்று மனைவி அமலாவிடம் நடந்ததை கூறியுள்ளார்.

இதனையடுத்து மன உளைச்சலில் இருந்தசெல்வம் நடந்ததை கடிதம் மூலம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடிதத்தை கைப்பற்றிய உறவினர்கள் அணைக்கட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த அணைக்கட்டு காவல் துறையினர் செல்வத்தின்‌ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இந்த தற்கொலைக்கு காரணமாக இருந்த மகி, குருசாமி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருந்த குமார் தலைமறைவாக உள்ளார். தலைமறைவாக உள்ள குமாரை கைது செய்ய வேண்டும் என செல்வத்தின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி