மாமல்லபுரத்தில் இந்திய அரசியல் அமைப்பு தினவிழா

72பார்த்தது
புரட்சி பாரதம் கட்சியின் வழக்கறிஞர் அணி சார்பில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள் என்ற கருத்தை வலியுறுத்தி இந்திய அரசியல் அமைப்பு தினவிழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் நடந்தது. இவ்விழாவில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி எம் எல் ஏ கலந்து கொண்டு பேசினார்.




அதனை தொடர்ந்து ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தின் மாவட்ட செயலாளர், பொருளாளர் ஒன்றிய செயலாளர், பொருளாளர், அனைத்து அணி பிரிவு பொறுப்பாளர்கள் என புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார் இவ்விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து வழக்கறிஞரணி நிர்வாகிகள் மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் என 1000 த்திற்க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி