மதுராந்தகம் அருகே நாளை திருவிழா நடைபெறும் நிலையில் அம்மன் தாலி திருட்டு, கோவில் உண்டியல் உடைப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள கூடலூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கிராம தெய்வமாக வழிபடுவதற்கு முன்னோர்களால் கட்டப்பட்ட ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவிலை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாளை ஊத்துக்காட்டு அம்மனுக்கு திருவிழா என்பதால் ஏற்பாடுகள் செய்து வந்தனர்.
இன்று காலை அம்மனுக்கு அபிஷேகம் செய்ய வந்த பக்தர்கள் கோவில் பூட்டு உடைந்து கோவிலில் இருந்த அம்மன் தாலி, பொட்டு தங்கம் என இரண்டரை சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
மேலும் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணமும் கோவில் எதிரே வைத்திருந்த சூலாயத்தையும் திருடிச் சென்றுள்ளனர். உடனடியாக ஊர் பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் மேல்மருவத்தூர் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.