மதுராந்தகம் ஏரி ஆழப்படுத்தும் பணி ஆமை போல் நகர்வதை கண்டித்தும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கோரியும் சி. ஐ. டி. யு வினரால் மறியல் போராட்டம் நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தமிழ்நாட்டின் பெரிய ஏரிகள் ஐந்தில் ஒன்றாக உள்ள மதுராந்த ஏரியை தூர் வார 50 ஆண்டுகளுக்கு மேலானதால் 2019 ஆம் ஆண்டு இந்திய தொழிற்சங்க மையம் முன் கையெடுத்து தூர்வாரும் கோரிக்கையை வைத்து போராடியது
ஏரியில் நீர் இருந்தால் தூர் வர முடியாது என ஏரியில் நீர் தேங்காதவாறு வடிய விட்டனர்
பனி துவங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றும் இன்னும் பத்து சதவீதம் பணி கூட நடைபெறவில்லை என்பதோடு, ஏரி நீரை நம்பி விவசாயம் செய்யும் விளை நிலம் சுமார் 3000 ஏக்கர் இரண்டு ஆண்டுகளாக தரிசாக விடப்பட்டு விவசாயிகள் வருவாயின்றி தவிக்கின்றனர்
தூர் வாறும் பணி துரிதமாக நடைபெறாமல் இருப்பதற்கு காரணமான அரசு அதிகாரிகளை கண்டிப்பதோடு
தமிழக அரசு தலையிட்டு மதுராந்தகம் ஏரியின் தூர் வாறும் பணியை உடனடியாக நிறைவேற்றுவதோடு, கடந்த ஆறு போக விளைச்சலையை இழந்து நிற்க விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க கோரி
காந்தி சிலை அருகே தொடங்கி பேரணியாக சென்று பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நின்று தமிழ்நாடு விவசாயகள் சங்கம், மற்றும் இந்திய தொழிற்சங்கம் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.