காஞ்சிபுரத்தில் பாஜக மாநில பயிலரங்கம்

60பார்த்தது
காஞ்சிபுரத்தில் பாஜக மாநில பயிலரங்கம்
காஞ்சிபுரம் நகரில் உள்ள தனியார் மஹாலில் பாஜக உறுப்பினர் சேர்க்கை இயக்கம் 2024 மற்றும் மாநில பயிலரங்கம் இன்று (ஆக. 21) காலை நடைபெற்றது.

இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவாடேகர் தலைமையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய அண்ணாமலை உலக அளவில் அதிக உறுப்பினர்களை வைத்திருக்கும் கட்சியான பாஜக, வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கூறினார்.

கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் ஹெச். ராஜா, வினோஜ் பி செல்வம், ஏ. பி. முருகானந்தம், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கே. எஸ். பாபு மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

தொடர்புடைய செய்தி