தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயிலில் நேற்று (ஜன,18) பக்தர்கள் 6 மணி நேரம் அடைத்துவைக்கப்பட்டதற்கு, “திருப்பதியில் மட்டும் 24 மணி நேரம் நிக்கிறான்.. நிக்கட்டும்” என அலட்சியமாக அமைச்சர் சேகர்பாபு பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். “கோபாலபுரம் குடும்பத்திற்கு நெருக்கம் என்ற ஆணவத்தில் சேகர்பாபு பேசுகிறார். அதிகார மமதையில் ஆடியவர்களுக்கு எல்லாம் காலம் பாடம் புகட்டியிருக்கிறது” என்றார்.