நினைவு துாண் மாற்றி அமைக்க இடம் தேர்வு செய்வதில் இழுபறி

80பார்த்தது
நினைவு துாண் மாற்றி அமைக்க இடம் தேர்வு செய்வதில் இழுபறி
செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட நல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்ககால புலவர் நல்லுார் நத்தத்தனார்.

இவர், தமிழின் சங்ககால நுால்களில் ஒன்றான பத்துப்பாட்டின் கீழ் வரும் சிறுபாணாற்றுப்படை நுாலை இயற்றியவர்.

இவரது நினைவை போற்றும் விதமாக, 1958ம் ஆண்டு நல்லுார் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலை அருகே, திருவுருவச்சிலை அமைக்கப்பட்டது.

பின், 1992ம் ஆண்டு தமிழக அரசு சார்பில், உருவச்சிலை அருகே நினைவுத் துாண் நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் பாரதிதாசன் பிறந்த நாளான ஏப்ரல் 29ம் தேதி தமிழ் வளர்ச்சி துறை சார்பில், செங்கல்பட்டு கலெக்டர் அல்லது மதுராந்தகம் ஆர். டி. ஓ. , தலைமையில், தமிழ் கவிஞர் நாள் நினைவு துாண் அருகே கொண்டாடப்படுவது வழக்கம்.

கிழக்கு கடற்கரை சாலை, நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி, இரு ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில், சாலையோரம் உள்ள நத்தத்தனார் நினைவு துாண் மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டது.

கடந்த 2023ம் ஆண்டு அப்போதைய கலெக்டர் ராகுல்நாத் தமிழ் கவிஞர் நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற போது, நினைவு துாண் மாற்றி அமைப்பது குறித்து தெரிவிக்கப்பட்டது.

பின், மாற்று இடம் தேர்வு செய்யக்கோரி அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆனால், தற்போது வரை மாற்று இடம் தேர்வு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி