செவிலிமேடு பாலாற்றில் புதிய பாலம் மண்பரிசோதனை பணி துவக்கம்

63பார்த்தது
செவிலிமேடு பாலாற்றில் புதிய பாலம் மண்பரிசோதனை பணி துவக்கம்
காஞ்சிபுரம்--வந்தவாசி சாலையில், செவிலிமேடு- -புஞ்சையரசந்தாங்ல் கிராமத்திற்கு இடையே செல்லும் பாலாற்றின் குறுக்கே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது.

இப்பாலத்தின் வழியாக செய்யாறு, திருவண்ணாமலை, வந்தவாசி, திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் வாகனங்கள் அதிகளவு சென்று வருகின்றன.

அகலம் குறைவான இப்பாலத்தின் வழியாக அதிக எடையுள்ள பொருட்களை ஏற்றிச்சென்ற கனரக வாகனங்களால், பாலத்தின் சாலை ஆங்காங்கே சேதமானது.

இப்பாலத்தை நெடுஞ்சாலைத்தறையினர் சீரமைத்தும் அடிக்கடி பாலம் சேதமடைந்து வருகிறது. இதனால், இப்பகுதியில் புதிய பாலம் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், செவிலிமேடு பாலாறு பாலத்திற்கு மாற்றாக, அருகிலேயே புதிதாக 100 கோடி மதிப்பில், 900 மீட்டர் நீளமும், 7. 5 மீட்டர் அகலத்தில் புதியதாக உயர்மட்ட பாலத்தை கட்ட நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக மாநில நெடுஞ்சாலை துறையின் கண்காணிப்பு பொறியாளர் செல்வகுமார், கோட்ட பொறியாளர் முரளிதரன், உதவி கோட்ட பொறியாளர் இளங்கோ, உதவி பொறியாளர் விஜய் உள்ளிட்டோர் சமீபத்தில் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், செவிலிமேடு பாலாற்றில், புதிய பாலம் அமைப்பதற்காக மண் பரிசோதனை செய்யும் பணி நேற்று துவங்கியது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி