ஸ்ரீபெரும்புதூரில் குட்கா விற்றவர் கைது!

60பார்த்தது
ஸ்ரீபெரும்புதூரில் குட்கா விற்றவர் கைது!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அருகே, மேவளூர்குப்பம் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக, ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் படி, நேற்று முன்தினம் இரவு, மேவளூர் குப்பம் பஜார் பகுதியில் உள்ள ஒரு கடையில், போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், விமல், ஹான்ஸ், கூல்லிப் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைத்து இருந்தது தெரிந்தது.
இதையடுத்து, 2 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளரான அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நயன் ஜியோடி தாயே, (30) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த இரண்டு கிலோ குட்கா பொருளை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி