ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், எறையூர் ஊராட்சியில், ‛மக்களுடன் முதல்வர்' முகாம் நேற்று நடந்தது. வருவாய், சுகாதாரம், மின்வாரியம், போலீஸ், கால்நடை பராமரிப்பு, வட்டார வளர்ச்சி, ஆதிதிராவிடர் நலன், சிறுகுறு நடுத்தர தொழில் துறை உள்ளிட்ட 15 மேற்பட்ட துறையின் பங்கேற்றனர்.
எறையூர், வல்லக்கோட்டை, மாத்துார், வல்லம், பண்ருட்டி, பேரிஞ்சம்பாக்கம் கிராமங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்டோர் பட்டா, பட்டா பெயர் மாற்றம், உரிமைத் தொகை, புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு தேவைக்காக கோரிக்கை மனு அளித்தனர்.
முகாமில், மனுதாரர்கள், 'ஆன்லைன்' பதிவு செய்த பின், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனுவை அளிக்க வேண்டும். இந்த நிலையில், ஆன்லைன் பதிவு செய்யும் இடத்தில் ‛இன்டர்நெட்' வேலை செய்யவில்லை.
இதனால், நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. வயதானோர், பெண்கள் கடும் அவதி அடைந்தனர்.