புதுப்பட்டினம் அரிமா சங்கம் சென்னை அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து இருதய சிகிச்சை மற்றும் பொது மருத்துவ பரிசோதனை முகாம் புதுப்பட்டினம் அரசினர் மேல்நிலை பள்ளியில் புதுப் பட்டினம் அரிமா சங்கத்தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது இம்முகாமில் இருதய பரிசோதனை , இரத்த அழுத்தம், ஈ. சி. ஜி, இரத்தத்தில் சர்க்கரை அளவு, எஃ கோ கார்டியோகிராம், உயரம் மற்றும் எடை அளவு போன்ற மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அப்போலோ மருத்துவமனையின் முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயக்குமார் மருத்துவர் அனந்த லட்சுமி ஜெயக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் முகாமில் பங்கேற்றவர்களுக்கு பரிசோதனைகள் செய்து மருந்து மாத்திகைகள் வழங்கினர். இதில் இருதய அறுவை சிகிச்சை தேவையென கண்டறியப்படும் நபர்களுக்கு சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனையில் சில நிபந்தனைகளுக்குட்பட்டு முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவச அறுவை சிகிச்சை செய்யப்படும் என அரிமா சங்கத்தினர் தெரிவித்தனர். முகாமில் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்று பரிசோதனை செய்துக்கொண்டனர் அரிமா சங்க செயலாளர் சே. சுரேஷ் பொருளாளர் மணிகன்டன் அரிமா சங்க பிரமுகர்கள் கிருஷ்ணராஜ், கலாவதி நாகமுத்து, வை. குமார், நேரு, சீனிவாசன், தங்கேஸ்வரன், வெற்றிவேல், மதியழகன், சந்தோஷ் உள்பட சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.