ஆயத்த பயிற்சி மையத்தில் மீண்டும் வருமா பூங்கா?

76பார்த்தது
ஆயத்த பயிற்சி மையத்தில் மீண்டும் வருமா பூங்கா?
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு, துவக்க நிலை ஆயத்த பயிற்சி மையம், 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இங்கு, காட்டாங்கொளத்துார் வட்டாரத்தை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயில்கின்றனர். ஆயத்த பயிற்சி மையத்தின் நுழைவு பகுதியில், ஊஞ்சல், சறுக்கு மரம் உள்ளிட்டவற்றுடன், குழந்தைகள் விளையாட பூங்கா அமைக்கப்பட்டது.

இந்த பூங்காவில் இருந்த செடிகள் அனைத்தும், கடந்த ஆண்டு அகற்றப்பட்டு, வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வரும் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றப்பட்டது. இதன் காரணமாக, குழந்தைகள் விளையாட போதிய இடவசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். மேலும், விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து, குழந்தைகள் விளையாட முடியாத நிலையில் உள்ளன.

மேலும், ஆயத்த பயிற்சி மையத்தை சுற்றிலும் செடிகள் வளர்ந்து, புதர் போல காட்சியளிக்கிறது. இதன் காரணமாக, பெற்றோர்கள் குழந்தைகளை இங்கு அழைத்து வர தயங்குகின்றனர். எனவே, இந்த பகுதியில் மீண்டும் பூங்கா அமைத்து, குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்களையும் அமைத்து தர வேண்டும் என, அப்பகுதிவாசிகள் இன்று(செப்.23) கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி