அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக கருணாகரனை கைது செய்தனர். பின், திருமுக்கூடல் ஊராட்சி அலுவலக கட்டடத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
அப்போது, அவரிடம் பல்வேறு சான்றுகள் பெற விண்ணப்பித்து, பல ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்த பலரும் அங்கு குவிந்தனர். அவர்களிடம், 10, 000 முதல் 90, 000 ரூபாய் வரை, கருணாகரன் லஞ்சம் வாங்கியதை அறிந்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிர்ந்தனர்.
அப்போது, பணத்தை திரும்ப மீட்டு தருமாறும் அல்லது தாங்கள் கேட்ட சான்றிதழ்களை வழங்க உதவுமாறும், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கோரினர்.