பத்மபூஷன் விருதுடன் சென்னை திரும்பிய பிரேமலதா விஜயகாந்த்

53பார்த்தது
விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதினை பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் விமான நிலையத்தில் வெளியே வந்த பின்பு தொண்டர்களிடம் காண்பித்து அதன் பின்பு திறந்தவெளி வாகனத்தில் ஏறி தொண்டர்கள் அனைவருக்கும் பத்மபூஷன் விருதினை பிரித்து ஒன்றன்பின் ஒன்றாக தொண்டர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் காண்பித்தார். அதன்பின்பு திறந்தவெளி வாகனத்தில் நின்றபடியே தொண்டர்களுக்கு கையசைத்தபடி கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அமைந்திருக்கும் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது விமான நிலையம் முழுவதும் தேமுதிக நிர்வாகிகள் தொண்டர்கள் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்ததும் குறிப்பிடத்தக்கது முன்னதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறியது என்னவென்றால் இந்த விருதை கேப்டனுக்கு சமர்ப்பிக்கிறேன். அவர் மீது அன்பு கொண்ட தமிழர்களுக்கு இந்த உயரிய பத்மபூஷன் விருதை சமர்ப்பிக்கிறேன் என தெரிவித்தார்

தொடர்புடைய செய்தி