குப்பையால் மாசடைந்துள்ள ஏரி போக்கு கால்வாய்

65பார்த்தது
குப்பையால் மாசடைந்துள்ள ஏரி போக்கு கால்வாய்
காஞ்சிபுரம் அடுத்த, சிங்காடிவாக்கம் கிராமத்தில், ஏரி போக்கு கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் வழியாக, விளை நிலங்களுக்கு தண்ணீர் செல்கிறது. சிங்காடிவாக்கம் ஏரி நிரம்பினால், போக்கு கால்வாய் வழியாக, அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் நீர் பாசனம் பெற்று, நெல் அறுவடை செய்து வருகின்றனர்.

தனியார் தொழிற்சாலை மற்றும் சிங்காடிவாக்கம் கூட்டு சாலை அருகே செல்லும் போக்குகால்வாயில், தனியார் தொழிற்சாலை பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பிற வகையான குப்பை கொட்டி மாசுபடுத்தி வருகின்றனர்.

இதனால், நீர் பாசனம் மற்றும் தண்ணீர் மாசு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஏரி போக்கு கால்வாயில் கொட்டும் குப்பையை தடுக்க, சம்பந்தப்பட்ட நீர் வள ஆதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, நீர் வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஏரி போக்கு கால்வாய்களை விவசாயிகளே பராமரித்துக் கொள்ளலாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆகையால், ஏரி நீர் பாசனம் சங்கத்தினரே, கால்வாயில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யலாம் என்றார்.

தொடர்புடைய செய்தி