சிறுமியிடம் அத்துமீறிய கள்ளக்காதலன் கைது

65பார்த்தது
செங்கல்பட்டு அருகே சிறுமியிடம் அத்துமீறிய கள்ளக்காதலன், போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீஸ்செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பகுதியை சேர்ந்தவர் சூர்யா ( 34). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் இவருக்கு அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் திருமணமான பெண் ஒருவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் படிப்படியாக அதிகரித்து கள்ளக்காதலாக மாறி உள்ளது.

கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த அந்த பெண்ணிற்கு 14 வயதில் மகள் உள்ள நிலையில், செங்கல்பட்டு அருகே வீடு வாடகைக்கு எடுத்து சூர்யா மற்றும் அந்தப் பெண் அனைவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சூர்யாவுக்கும் அந்த பெண்ணுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது சூர்யா அந்தப் பெண்ணை கடுமையாக தாக்கியது மட்டுமில்லாமல் பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். அருகில் இருந்தவர்கள் மீட்டு அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதுகுறித்து பாலூர் போலீசார் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அப்பெண்ணின் 13 வயது மகளிடம் சூர்யா பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது
இதனால் சூர்யாவுக்கும் அந்த பெண்ணுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது
இதனை அடுத்து சூர்யா மீது கொலை முயற்சி வழக்கு மற்றும் போக்சோ ஆகிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :