இந்திய அணியின் இளம் நட்சத்திரம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐச
ிசியின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிப்ரவரி மாதத்திற்காக இந்த விருதைப் பெற்றார். நியூசிலாந்தின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் கேன் வில்லியம்சன் மற்றும் இலங்கை தொடக்க ஆட்டக்காரர் நிசாங்கா ஆகியோரின் போட்ட
ியையும் மீறி ஜெய்ஸ்வாலுக்கு இந்த விருது கிடைத்தது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் 89 சராசரியில் 712 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு இரட்டை சதங்கள் உள்ளன.