43 தொகுதிகளுக்கான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அசாம் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், குஜராத் ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அசாம் மாநிலம் ஜோர்கட் தொகுதியில் கவுரவ் கோகோய் போட்டியிடுகிறார். டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியில் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ள நிலையில் எந்தெந்த தொகுதி என முடிவு செய்யப்படாததால் அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.