மதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக கமல்ஹாசன் இன்று பிரச்சாரம்

61பார்த்தது
மதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக கமல்ஹாசன் இன்று பிரச்சாரம்
திருச்சி, பெரம்பலூர் தொகுதிகளில் மதிமுக, திமுக வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் இன்று பிரச்சாரம் செய்கிறார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில், இன்று மாலை 5 மணியளவில் திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு இருந்து திமுக கூட்டணியில் உள்ள மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து தீப்பெட்டி சின்னத்துக்கு வாக்கு கேட்டு பொதுமக்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார்.
மாலை 6.30 மணியளவில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி