உளுந்தூர்பேட்டை: இந்து மக்கள் கட்சியினர் கைது

51பார்த்தது
உளுந்துார்பேட்டையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

நக்கீரன் கோபாலை அவதுாறாக பேசியதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜி மீது கோவை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். இந்த கைதை கண்டித்து உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகம் முன் இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் கருணாநிதி. செயலாளர் துரை, பொருளாளர் ரவி, இளைஞரணி செயலாளர் காத்தவராயன் உட்பட பலர் பங்கேற்றனர்.


ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி இல்லாததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட15 பேரை உளுந்துார்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி