கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள , அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆடி கிருத்திகை முன்னிட்டு, இன்று நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற பால் குடங்களை எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். பக்தர்கள் கொண்டு வந்த பால் குடங்களை மூலவர் மற்றும் உற்சவருக்கு ஊற்றி சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு மகா தீபாரதனையும் நடைபெற்றது.