கள்ளக்குறிச்சி அருகே தனியார் கல்லூரி மாணவி மாயம்

63பார்த்தது
கள்ளக்குறிச்சி அருகே தனியார் கல்லூரி மாணவி மாயம்
கள்ளக்குறிச்சி வ. உ. சி. , நகரை சேர்ந்த சூசை மகள் கனிமொழி, 23; இவர், கள்ளக்குறிச்சி தனியார் கல்லுாரியில் பி. எட். , படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலை 8: 45 மணிக்கு கல்லுாரிக்கு சென்றவர், மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை.

இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து, இவரது தந்தை சூசை, போலீசில் புகார் செய்தார்.

கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you