சின்னசேலம் அடுத்த கல்லாநத்தத்தை சேர்ந்தவர் ஞானவேல், (55); பிரபல கள்ளச்சாராய வியாபாரியான இவர், தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., ரஜத்சதுர்வேதி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில், கலெக்டர் பிரசாந்த் கள்ளச்சாராய வியாபாரி ஞானவேலை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து ஏற்கனவே கடலூர் மத்திய சிறையில் உள்ள ஞானவேலிடம் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையினை சின்னசேலம் போலீசார் வழங்கினர்.