இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதி நேற்று (மார்ச் 25) மாலை 6 மணியளவில் மாரடைப்பால் காலமானார். சமீபத்தில் அவருக்கு இதய அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது. இந்த நிலையில் மனோஜ் உடல் சென்னை நீலாங்கரை கேசரினா டிரைவில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு திரையுலகினர் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். அவரது இறுதி சடங்கு இன்று (மார்ச் 26) மாலை 4:30 மணி அளவில் பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.