கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
சிவகாமி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாட்டையொட்டி, சுவாமி மற்றும் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரத்தில், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக வந்திருந்து சாமியை வழிபட்டனர்.
இதேபோல் கள்ளக்குறிச்சி கமலா நேரு தெரு-நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், சாமியார் மடம் செம்பொற்ஜோதிநாதர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், முடியனுார்-தென்கீரனுார் அருணாசலேஸ்வரர், வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர், தண்டலை சுயம்பு நாதேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதேஸ்வரர், கரடிசித்துார் விருத்தகிரீஸ்வரர், அரியபெருமானுார் ஆத்மஞான லிங்கேஸ்வரர், ஆலத்துார் திருவாலீஸ்வரர், பல்லகச்சேரி ராமநாதீஸ்வரர் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.