2000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் மகா கும்பாபிஷேகம்

77பார்த்தது
2000 ஆண்டுகள் பழமையான  சிவன் கோவில் மகா கும்பாபிஷேகம்
உளுந்தூர்பேட்டை அருகே 63 நாயன்மார்களின் ஒருவரான சுந்தரர் அவதரித்த திருநாவலூரில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான மனோன்மணி அம்பாள் சமேத பக்தஜனேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் அவதரித்த திருநாவலூரில் 2000 ஆண்டுகள் பழமையான மனோன்மணி அம்பாள் சமேத பக்தஜனேஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் மண்டபம் பிரகாரம் ராஜகோபுரம் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு வண்ணங்கள் பூசப்பட்ட நிலையில் கும்பாபிஷேகத்திற்கு தயாராகி முதற்கால யாகசாலை பூஜை திங்கட்கிழமை இரவ தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை 2-ம் 3-ம் காலை யாகபூஜையும் நடந்தது.

நேற்று புதன்கிழமை 4 மற்றும் 5-ம் கால யாக பூஜைகளும் நடைபெற்றது. வியாழக்கிழமையான இன்று காலை விக்னேஸ்வர பூஜை மற்றும் 6- கால யாகசாலை பூஜையும் அதைத் தொடர்ந்து மகாபூர்ணா தீப ஆராதனையும் நடைபெற்றது. விநாயகர் முதலான பரிவார கலசங்கள் புறப்பாடு நடந்த நிலையில் யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தபடி கோவிலை வலம் வந்தனர். சிவ பக்தர்கள் கைலாச வாத்தியங்களுக்கு ஏற்ப சிவதாண்டவங்கள் ஆடியபடி கோவிலை சுற்றி வந்தனர். தொடர்ந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஓம் நமச்சிவாய என பக்தர்களின் கோஷம் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி