வழக்கறிஞரை வெட்டிய சம்பவத்தில் தம்பதி சிறையில் அடைப்பு

79பார்த்தது
வழக்கறிஞரை வெட்டிய சம்பவத்தில் தம்பதி சிறையில் அடைப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை வெட்டிய சம்பவத்தில் ஆனந்தன், சத்யாவதி தம்பதி சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனந்தன் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய மனைவியையும் கைது செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நேற்று (நவ., 20) பட்டப்பகலில் நீதிமன்றம் அருகே நடுரோட்டில் வைத்து வழக்கறிஞர் கண்ணன் என்பவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி