சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் கூலி வேலை செய்வதற்காக சென்று கொண்டிருந்தார். இவரின் இருசக்கர வாகனத்தின் முன் பகுதியில் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, திடீரென வாகனத்தை நிறுத்திவிட்டு கூச்சலிட்டார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் இருசக்கர வாகனத்தின் சீட் கவரை பிரித்து, அதிலிருந்த பாம்பை விரட்டி அடித்தனர். பாம்பு வாகனத்திலிருந்து இறங்கி ஓடியதால், வாகன ஓட்டி நிம்மதி அடைந்தார்.