புதிய செயல் திட்டங்கள் அறிக்கை தயாரிக்க அறிவுறுத்தல்

58பார்த்தது
புதிய செயல் திட்டங்கள் அறிக்கை தயாரிக்க அறிவுறுத்தல்
கல்வராயன்மலையில் மேற்கொள்ள வேண்டிய புதிய செயல் திட்டங்கள் தொடர்பாக அறிக்கை தயார் செய்து வழங்க அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

கல்வராயன்மலை பகுதியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தும், புதியதாக மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பாக அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

கல்வராயன்மலை ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். உதயசூரியன் எம். எல். ஏ. , முன்னிலை வகித்தார். அதில் மலைவாழ் மக்களின் முக்கிய கோரிக்கையான சாலை வசதி, புதிய அங்கன்வாடி கட்டடம், கூடுதல் ஆம்புலன்ஸ் வசதி, கூடுதல் பஸ் வசதி, பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வனத்துறையின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதேபோல் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் விவசாயிகளின் கோரிக்கை, புதிய மானிய திட்டங்கள், கறவை மாடு வழங்குதல், நாட்டுக்கோழி வளர்ப்பு, கால்நடை மருந்தகங்கள் ஏற்படுத்துதல் போன்ற அரசின் பல்வேறு துறைகளின் நலத்திட்ட பணிகள் குறித்து கேட்டறியப்பட்டது.

தொடர்புடைய செய்தி