புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

77பார்த்தது
புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
சங்கராபுரம் ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. சங்கராபுரம் ரோட்டரி மண்டபத்தில் 2024-25 ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது.

தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் கோபிநாத் அறிக்கை சமர்பித்தார். புதிய தலைவராக ஆச்சி அசோக்குமார், செயலாளராக சங்கர், பொருளாளராக இரவி பொறுப்பேற்றனர்.

ரோட்டரி மாவட்ட ஆளுனர் தேர்வு சிவசுந்தரம் முன்னிலை வகித்தார்.

ரோட்டரி முன்னாள் துணை ஆளுனர்கள் முத்துக்கருப்பன், ஜனார்தனன், ராசேந்திரன், திருநாவுக்கரசு, வெங்கடேசன், முன்னாள் தலைவர்கள் மூர்த்தி, செந்தில்குமார், ராஜப்பா, செளந்தர், சுதாகரன், அருணாசலம், ரகுநந்தன், ஆறுமுகம், சீனுவாசன் மற்றும் இன்னர்வீல் கிளப் தலைவி சுபாஷினி ரமேஷ், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், ரோட்டரி கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு நிதி உதவியும், ஏழை பெண்களுக்கு சமையல் பொருட்களும் வழங்கினர்.

துணை ஆளுனர் ராமலிங்கம் புதிய உறுப்பினர்களை ரோட்டரியில் இணைத்து வைத்தார்.

விழாவில் போலியோ நிதியாக ரு. 55 ஆயிரம் வசூலானது.

முடிவில் செயலாளர் சங்கர் நன்றி கூறினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி