கள்ளக்குறிச்சி, புறவழிச்சாலையில் உள்ள ஜே.எஸ். குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ. பள்ளியில் கண் பரிசோதனை முகாம் நடந்தது. முதல்வர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். துணை முதல்வர் பாபு முன்னிலை வகித்தார். முகாமில், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர்கள் மாணவர்கள், மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பரிசோதனை செய்தனர். குறைபாடுள்ளவர்களுக்கு கண்ணாடி அணிய அறிவுறுத்தினர். இதில், ஆரோக்கிய கண் பார்வைக்கு உட்கொள்ள வேண்டிய உணவுகள், பராமரிப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.