திருக்கோவிலுார் அருகே உள்ள கீழத்தாழனுார் எல்லைக்குட்பட்ட கடலுார் புறவழிச்சாலையில் 63 கே.வி. திறன் கொண்ட மின்மாற்றி உள்ளது. இதன் மூலம் 20க்கும் மேற்பட்ட விவசாய மின் மோட்டார்கள் இயங்கி வருகின்றன. நேற்று(ஜன 29) அதிகாலை 2:00 மணியளவில் மர்ம நபர்கள் மின்மாற்றியை உடைத்து அதிலிருந்து காப்பர் வயரை திருடிச் சென்றனர். இதனால் மின்வாரியத்திற்கு ரூ.4 லட்சம் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விவசாய நிலங்கள் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளன.
உதவி மின்பொறியாளர் சம்பத் ராஜன் புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் திருக்கோவிலூர் பகுதியில் கடந்த ஓராண்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் உடைக்கப்பட்டு அதிலிருந்த காப்பர் வயர்கள் திருடப்பட்ட சம்பவம் மின்வாரியத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இனியாவது மின்மாற்றி காப்பர் கம்பியை திருடும் மர்மகும்பலை போலீசார் கண்டறிந்து கைது செய்தால் மட்டுமே இச்சம்பவத்தை தடுத்து நிறுத்த முடியும்.