வாணாபுரம் அடுத்த பெரியபகண்டை காலனியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகள் சக்தி, 26; மனநலம் பாதிக்கப்பட்டவர். இவருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படுவது வழக்கம்.
கடந்த, 21ம் தேதி இரவு 9: 00 மணிக்கு, இயற்கை உபாதை காரணமாக, வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது, அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இறங்கி சக்தியின் உடலை மீட்டனர்.