இலவச தையல் இயந்திரம் வழங்கல்

58பார்த்தது
இலவச தையல் இயந்திரம் வழங்கல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்னாள் படைவீரரின் மனைவி மற்றும் கைம்பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண்கள் மற்றும் திருணமாகாத மகள்களிடமிருந்து இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்காக மத்திய, மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங் களில் தையற்பயிற்சி முடித்து உரிய சான்று பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுவரை இலவச தையல் இயந்திரம் பெறாத முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண்கள் மற்றும் திருமணமாகாத மகள்கள் உரிய சான்றுகளுடன் விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகி பதிவு செய்து இலவச தையல் இயந்திரங்களை பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி