கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மகளிர் ஊக்குனர்கள் ஆட்சியரிடம் ஊக்கத்தொகை கேட்டு மனு கொடுத்தனர்..
ஊரக வளர்ச்சித் துறையில் கிராம ஊராட்சிகளில் சுகாதார ஊக்குனர்கள் என்ற பெயரில் ஊழியர்கள் கடந்த 13 வருடங்களாக பணியாற்றி வருகின்றனர் என்று கூறப்படுகிறது. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பணிபுரியும் இவர்கள் கிராமத்தில் தனி நபர் கழிவறையை கட்ட பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி கழிவறை கட்ட வைத்தல் உள்ளிட்ட கிராமத்தில் நிலவும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் மாதம் 2000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பல மாவட்டங்களில் இவர்களைப் போன்ற பணியாளர்கள் ஊக்கத்தொகை பெற்று வரும் நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 7 மாதமாக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இவர்கள் ஊக்கத்தொகை பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து இவர்கள் சார்ந்துள்ள ஓட்ஸா கூட்டமைப்பின் மாநில தலைவர் அமல்ராஜ் என்பவரின் அறிவுறுத்தலுக்கினங்க கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் அஞ்சலை என்பவரது தலைமையில் இந்த கிராம சுகாதார ஊக்குனர்கள் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கல்வராயன் மலை, சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், தியாகதுருகம், உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் உள்ளிட்ட ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இருந்து இந்த சுகாதார ஊக்குநர்கள் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தங்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகையை வழங்க கோரி மனு அளித்தனர்.