11 வட்டாட்சியர்கள் பணியிடமாற்றம் ஆட்சியர் உத்தரவு

60பார்த்தது
11 வட்டாட்சியர்கள் பணியிடமாற்றம் ஆட்சியர் உத்தரவு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், கள்ளக்குறிச்சி, வாணாபுரம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றி வந்த வருவாய் வட்டாட்சியர்கள் உள்ளிட்ட 11 பேரை அதிரடியாக பணியிடை மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் எம். எஸ். பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியராக கமலக்கண்ணன் என்பவரும், சின்னசேலம் வருவாய் வட்டாட்சியராக மனோஜ் முனியன் என்பவரும், வாணாபுரம் வருவாய் வட்டாட்சியராக பாலகுரு என்பவரும், உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியராக அனந்த கிருஷ்ணன் என்பவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி