சூளாங்குறிச்சியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

56பார்த்தது
சூளாங்குறிச்சியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், சூளாங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் முனியான்டி மகன் சரத்பாபு. லாரி ஓட்டுநரான இவா், இதே கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு கிராவல் மண்ணை லாரியில் ஏற்றிச் சென்றாராம். அப்போது, இதே பகுதியைச் சோ்ந்த ராஜகோபால் மகன் துரை லாரியை மறித்து மண் அள்ள அனுமதி உள்ளதா என கேட்டதாக கூறப்படுகிறது. இதில், இருவரிடையே வாக்கு வாதம் ஏற்பட்டு துரையை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடா்பாக அந்தப் பகுதி மக்கள் சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் சூளாங்குறிச்சி-கள்ளக்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த தியாகதுருகம் தனிப்பிரிவு தலைமைக் காவலா் ரா. ஆறுமுகம் நிகழ்விடம் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்தை நடத்தினாா். இதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த திடீா் மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி